மெஸ்சியிடம் மன்னிப்பு கேட்ட மெக்சிகோ குத்துச்சண்டை சாம்பியன்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சியிடம் மெக்சிகோ குத்துச்சண்டை சாம்பியன் மன்னிப்பு கேட்டார்
தோகா,
மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. முந்தைய போட்டியில் சவுதி அரேபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இந்த வெற்றியை அர்ஜெண்டினா வீரர்கள் ஓய்வறையில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அணியை ஊக்குவிக்கும் பாடலுக்கு பல வீரர்கள் சட்டையை கழட்டிவிட்டு கொண்டாட்டமாக நடனமாடினார்கள்.
அப்போது லியோனல் மெஸ்ஸி மெக்சிகோ அணியின் ஜெர்சியை காலுக்கு அடியில் போட்டு அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மெஸ்ஸி மெக்சிகோ ஜெர்சியை அவமரியாதை செய்கிறார் என்று மெக்சிகோ ஆதரவாளர்களிடையே கோபத்தை தூண்டியது. இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த உலக குத்துச்சண்டை சாம்பியன் சால் கேன்லோ அல்வாரெசுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து அவர் மெஸ்சிக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் வெற்றி கொண்டாட்டத்தின் போது தங்கள் நாட்டு கொடியை அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி அவமதித்ததாக கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மெக்சிகோ குத்துச்சண்டை சாம்பியன் சால் கேன்லோ அல்வாரெஸ், அவரிடம் மன்னிப்பு கோரினார்.