ஐ.எஸ்.எல். கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
2024-25க்கான ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.;
புதுடெல்லி,
2024-25க்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் அடுத்த மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னையின் எப்.சி. பெங்களூரு எப்.சி, மும்பை சிட்டி எப்.சி, எப்.சி கோவா உள்ளிட்ட 13 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் மோகன் பகான் - மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன.
சென்னையின் எப்.சி அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 14ம் தேதி ஒடிசா எப்.சி அணியை புவனேஷ்வரில் எதிர்கொள்ள உள்ளது. இந்த சீசனில் புதிதாக முகமதின் ஸ்போர்ட்டிங் என்ற அணி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.