ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
மோகன் பகான் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தா,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஒடிசா எப்.சி. அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் 2-வது சுற்று கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்தது.
இதில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. முதலாவது சுற்றில் ஒடிசா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இரு அணியும் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில், அதிக கோல் அடிப்படையில் (3-2) மோகன் பகான் இறுதிப்போட்டி வாய்ப்பை தட்டிச் சென்றது. மோகன் பகான் தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.