ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ஒடிசா அணி முதலிடம்

இந்த சீசனில் 3-வது வெற்றியை பதிவு செய்த ஒடிசா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Update: 2022-10-27 16:26 GMT

Image Tweeted By @IndSuperLeague

புவனேஸ்வர்,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் இன்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பெங்களூரு- ஒடிசா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஒடிசா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஒடிசா அணியின் சார்பாக நந்த குமார் 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 3-வது வெற்றியை பதிவு செய்த ஒடிசா அணி 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்