ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்ஸ் ஒப்பந்தம் நீட்டிப்பு

சென்னையின் எப்.சி அணியில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-23 13:34 GMT

Image Courtesy: @ChennaiyinFC

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ எஸ் எல் ) கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி அணியில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

26 வயது முன்கள வீரரான கானர் ஷீல்ட்ஸ் கடந்த 2023-ம் ஆண்டு சென்னை அணியில் இணைந்தார். அவர் இதுவரை சென்னை அணிக்காக 27 ஆட்டங்களில் விளையாடி 5 கோல் அடித்திருப்பதுடன் 4 முறை கோல் போட உதவி புரிந்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்