ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி தோல்வி

சென்னையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - முகமைதன் எப்.சி அணிகள் மோதின.

Update: 2024-09-26 16:25 GMT

சென்னை,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை -  முகமைதன் எப்.சி அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய முகமைதன் எப்.சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் பனாய் கோல் அடித்தார்.

2வது ஆட்டத்தில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாகும். 3வது ஆட்டத்தில் விளையாடியுள்ள முகமைதன் எப்.சி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.  

Tags:    

மேலும் செய்திகள்