ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் லால்டின்புயா

சென்னையின் எப்.சி. அணியில் மிசோரத்தை சேர்ந்த லால்டின்புயா 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-06-08 00:47 GMT

Image Courtesy: @ChennaiyinFC

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பங்கேற்று வரும் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியில் மிசோரத்தை சேர்ந்த லால்டின்புயா 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பின்கள வீரரான 27 வயது லால்டின்புயா 2024-25-ம் ஆண்டு சீசனுக்காக சென்னையின் எப்.சி.யில் இணையும் 3-வது வீரர் ஆவார். முன்னதாக அவர் 2022-ம் ஆண்டில் இருந்து ஜாம்ஷெட்பூர் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்