'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்; இந்தியா - மொரீசியஸ் ஆட்டம் 'டிரா'
நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா - மொரீசியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கச்சிபவுலி,
இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. இந்தியா, சிரியா, மொரீசியஸ் என மூன்று அணிகள் விளையாட உள்ளன.
நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா - மொரீசியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் வீரர்கள் எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன்கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என டிராவில் முடிந்தது.