சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய கால்பந்து அணி

சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணி பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Update: 2023-07-26 13:55 GMT

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணி (ஆண்கள் , பெண்கள் ) பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ஆசிய தரவரிசையில் டாப் 8 இடத்தில் இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதியால் இந்திய அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் தற்போது மத்திய அரசு அந்த விதியை தளர்த்த முடிவு செய்துள்ளதாக விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி. வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது தேசிய கால்பந்து அணிகளான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளது.

டாப் 8 இடத்தில் இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதியை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபகாலங்களில் அவர்களின் சிறப்பான செயல்பாடுளை மனதில் கொண்டு, தளர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார்கள் என்று  நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்