நட்புறவு கால்பந்து போட்டி: வியட்நாம் அணியிடம் வீழ்ந்தது இந்திய அணி

வியட்நாம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Update: 2022-09-27 17:02 GMT

Image Tweeted By @IndianFootball

ஹோ சி மின்,

வியட்நாம், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் நடந்து வருகிறது. தோங் நாட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது.

இந்த நிலையில் இந்திய அணி இன்று பலம் வாய்ந்த வியட்நாம் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய வியட்நாம் அணி போட்டியின் 10-வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை அடித்தது.

அதை தொடர்ந்து போட்டியின் 49-வது நிமிடத்தில் வியட்நாம் வீரர் நுயென் வான் டோன் கோல் அடித்தார். தொடர்ந்து 70-வது நிமிடத்தில் வியட்நாம் வீரர் நுகுஎன் வான் கோல் அடித்தார். சிறப்பாக விளையாடிய வியட்நாம் அணியின் தடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியின் கோல் முயற்சிகளை தடுத்து வந்தனர். இதனால் இறுதி வரை இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் வியட்நாம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்