'மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை விட நான் சிறந்தவன்'-சுனில் சேத்ரி

தேசிய அணிக்காக சிறப்பாக செயல்பட்டதில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை விட நான் சிறந்தவன் என இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-07-11 06:37 GMT

பெங்களூர்,

கடந்த வாரம் பெங்களூரில் நடந்த 2023 தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷி கோப்பையை இந்திய அணி வென்றது. கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனக்கும் மற்ற வீரர்களுக்கும் கிடைத்த ஆதரவு, பாராட்டு மற்றும் ஊக்கத்தை பணிவுடன் எற்றுக் கொள்வதாக கூறினார்.

மேலும் அவர் போட்டியின் முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. மைதானத்தில் ரசிகர்கள் ஆட்டம் முழுவதும் எங்களை ஊக்குவித்த விதம் சிறப்பானது மற்றும் மாயாஜாலமான ஒன்று.குவைத் மற்றும் லெபனான் முறையே இறுதி மற்றும் அரையிறுதியில் இந்தியா உடன் மோதின. இரண்டு அணிகளுமே உண்மையில் நல்ல தரமான அணிகள். அவைகளை தோற்கடித்தது கோப்பையை கைப்பற்றியது சிறப்பானதாக இருந்தது "என்று அவர் கூறினார்.

இந்திய கால்பந்து மீதான ரசிகர்களின் அணுகுமுறை மற்றும் விழிப்புணர்வில் ஒரு நேர்மறையான மாற்றம் எற்பட்டு உள்ளதாக சேத்ரி கூறி உள்ளார். கால்பந்தைப் பற்றி பேசத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். சூழ்நிலை மாறுவதை என்னால் உணர முடிகிறது"என்று அவர் மேலும் கூறினார்.

சேத்ரியின் அடுத்த இலக்கு வரவிருக்கும் ஆசிய கோப்பையின் மீது உள்ளது.

"ஆசியக் கோப்பை எங்களுக்கு உலகக் கோப்பை போன்றது. இது எங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, எனவே, எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியமானது. இந்த அழுத்தத்தை வீரர்கள் மீது நான் செலுத்த விரும்பவில்லை. ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்பட வெண்டும். ஒவ்வொரு முறையும் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுகிறோம்.இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம் " என்று சேத்ரி கூறி உள்ளார்.

" நான் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியின் ரசிகன். ஆனால், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் அவர்களை விட சிறந்தவனாக இருக்க முடியும்," என்று அவர் கூறினார்.

சுனில் சேத்ரி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி மற்றும் பீலே போன்ற ஜாம்பவான்களுடன் தேசிய அணிகளுக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்