இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் - சிபிஐ அதிரடி விசாரணை..!

இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-21 12:37 GMT

புதுடெல்லி,

இந்தியாவைச் சேர்ந்த 5 கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள அனைந்திந்திய கால்பந்து சம்மேளனத்தில், சமீபத்தில் சோதனையில் ஈடுபட்ட சிபிஐ, சூதாட்ட புகார் குறித்து 5 கால்பந்து கிளப்களின் ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள 5 கால்பந்து கிளப்களுக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச இடைத்தரகர் வில்சன் ராஜ் பெருமாளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கிளப்களின் உரிமையாளர்கள், விளம்பரதாரர்கள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். புகாரில் சிக்கியுள்ள கிளப்கள் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்