பிரான்ஸ் கால்பந்து வீரர் இடைநீக்கம்
2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் 30 வயதான போக்பா அங்கம் வகித்திருந்தார்.;
ரோம்,
பிரான்ஸ் கால்பந்து அணி வீரர் பால் போக்பா, இத்தாலியின் யுவன்டெஸ் கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவரிடம் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் பி மாதிரிசோதனை நடத்தும்படி கோரியுள்ளார். இதிலும் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணமானால் 2 முதல் 4 ஆண்டு வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும். 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் 30 வயதான போக்பா அங்கம் வகித்திருந்தார்.