கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடம் - இதயம், சிறுநீரகம் தீவிர பாதிப்பு என தகவல்

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2022-12-27 02:45 GMT

பிரேசிலா,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியுள்ளது.

மேலும், நுரையீரல், இயத செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை சூழ்ந்து இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே பீலே குணமடைய உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்