2022 - உலககோப்பை கால்பந்து கொண்டாட்டம்:சிறிய நாடு நடத்தும் பெரிய திருவிழா முழு விவரம்

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் தயாராக உள்ளது.;

Update:2022-11-15 11:48 IST

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.

 உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கப்பட உள்ளது.கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும்.

1963-ம் ஆண்டு பிபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றதே இல்லை. இந்த முறை போட்டிகளை நடத்துவதால் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.

கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் வரும் 20-ம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வேடார் அணியை எதிர்கொள்கிறது.

28 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் நடத்தப்படும் என்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் என்ற பெருமையை பெற உள்ளது கத்தார் போட்டி. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ம்ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது. எப்படி இருப்பினும் கால்பந்து போட்டிக்காக உலகநாடுகளின் கண்கள் கத்தாரைநோக்கி திரும்பியுள்ளன.

உலக கால்பந்து போட்டி வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை உலககோப்பையை கைப்பற்றிய அணியாகும்.

20: 1930ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை போட்டிக்குப் பிறகு இதுவரை 20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

32: இந்த ஆண்டு எட்டு பிரிவுகளில் 32 அணிகள் போட்டியிடுகின்றன.

  2022   உலக கோப்பை கால்பந்து போட்டி கால அட்டவணை முழு விவரம்

குழு ஏ: கத்தார், இக்வடார், செனகல், நெதர்லாந்து

குழு பி: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குழு சி: அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

குழு டி: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா

குழு இ: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்

குழு ep: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேசியா

குழு ஜி: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

குழு எச்: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

8: இதுவரை எட்டு நாடுகள் மட்டுமே கோப்பையை வென்றுள்ளன. பிரேசில் ஐந்து முறையும், ஜெர்மனி மற்றும் இத்தாலி தலா 4 முறையும் வென்றுள்ளன.

அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

8:இந்தப் போட்டிக்காக கத்தாரில் மொத்தம் 8 மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 8-ல் 7 மைதானங்கள் முன்பே கட்டப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஒன்றும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒருமணி நேர பயணத்தில், அதிகபட்சமாக 43 மைல்கள் தொலைவில் உள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ள 8 மைதானங்களின் விவரம்



லுசைல் ஸ்டேடியம் (இருக்கைகள்- 80,000)

அல் பேத் ஸ்டேடியம் (இருக்கைகள்- 60,000)

ஸ்டேடியம் 974 (இருக்கைகள்- 40,000)

கலீபா சர்வதேச அரங்கம் (இருக்கைகள்- 45,416)

எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (இருக்கைகள்- 40,000)

அல் துமாமா ஸ்டேடியம் (இருக்கைகள்- 40,000)

அல் ஜனுப் ஸ்டேடியம் (இருக்கைகள்- 40,000)

அகமது பின் அலி ஸ்டேடியம் (இருக்கைகள்- 40,000)

80: உலகக் கோப்பையில் விளையாடும் 80வது அணி கத்தார்.

2.6: ரஷியா 2018 உலகக் கோப்பையின் போது ஒரு ஆட்டத்திற்கு சராசரியான கோல்களின் எண்ணிக்கை.

27.7: அர்ஜென்டினா அணியின் சராசரி வயது.

24.5: அமெரிக்க அணியின் சராசரி வயது.

500 கோடி : உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான மக்கள், இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 15 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்ப்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 1,75,000 ஹோட்டல் அறைகள் தயாராக உள்ளன.

உலக கோப்பையில் விளையாடும் உலகின் சிறந்த வீரர்கள்

334,000: உலகக் கோப்பைக்கு (2018) தகுதி பெற்ற மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்தின் மக்கள் தொகை.

13: பிரான்சின் ஜஸ்ட் போன்டைன் 1958ல் 13 கோல்களுடன் ஒரே உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

16: 2002 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட நான்கு போட்டிகளில் ஒரே வீரர் அடித்த அதிக உலகக் கோப்பை கோல்கள் - ஜெர்மனியின் மிரோஸ்லாவ் கிளோஸ்.

11,581: கத்தாரின் சதுர கிலோமீட்டர் பரப்பளவு. உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு கத்தார்.

ரூ.357கோடி : கத்தாரில் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை.

போட்டிவிவரங்களை படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய



Tags:    

மேலும் செய்திகள்