பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு
எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.;
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே. தற்சமயத்தில் ரொனால்டோ, மெஸ்சி போன்ற ஜாம்பவான்களுக்கு இணையாக போற்றப்படுகிறார். இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் ரொனால்டோவுக்கு ஆதரவாகவும், மெஸ்சியை கிண்டல் செய்யும் விதமாகவும் பதிவுகள் வந்துள்ளது. இதனால் இது கால்பந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.