ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; குரோஷியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின்

மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.

Update: 2024-06-16 02:38 GMT

Image Courtesy: AFP

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் போட்டியின் 2-வது நாளான நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் - குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி முதல் பாதி ஆட்டத்தில் 3 கோல்களை அடித்து 3-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்