ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுக்கல், துருக்கி அணிகள் வெற்றி

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

Update: 2024-06-19 01:41 GMT

Image Courtesy: AFP

டார்ட்மெண்ட்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு டார்ட்மெண்டில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் துருக்கி - ஜார்ஜியா அணிகள் மோதின..

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் துருக்கி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு 2 கோல்கள் அடித்து அசத்தினர். ஜார்ஜியா வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த ஆட்டத்தை 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணி கைப்பற்றியது. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு லீப்ஜிக்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - செக் குடியரசு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்