ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: குரோஷியா - அல்பேனியா அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி - ஹங்கேரி, ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோத உள்ளன.

Update: 2024-06-19 04:08 GMT

Image Courtesy: @UEFA

ஹாம்பர்க்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு ஹாம்பர்க்கில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் குரோஷியா - அல்பேனியா அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இரவு 9.30 மணிக்கு ஸ்டட்கார்ட்டில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி - ஹங்கேரி அணிகள் மோத உள்ளன. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு கொலோனில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்