யூரோ தகுதிச்சுற்று: கிரீஸை வீழ்த்தியது பிரான்ஸ்
2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.;
யூரோ கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் மவ்ரோபனாஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் கிரீஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. என்றாலும் பிரான்ஸ் அணியை மேலும் கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கிரீஸ் அணியாலும் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது.
'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரீஸ் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.