ஐ.எஸ்.எல் கால்பந்து: காயம் காரணமாக ஈஸ்ட் பெங்கால் அணியின் கோல்கீப்பர் நவீன் குமார் விலகல்
இந்தியாவை சேர்ந்த நவீன் குமார் காயம் காரணமாக தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
சென்னை,
11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணியின் கோல்கீப்பராக உள்ள இந்தியாவை சேர்ந்த நவீன் குமார் காயம் காரணமாக தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி வெளியிட்டுள்ள பதிவில் "எங்கள் அணியின் கோல்கீப்பர் நவீன் குமார் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடமாட்டார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.