கோபா அமெரிக்க கால்பந்து: உருகுவே அணியை வீழ்த்தி கொலம்பியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தொடக்கம் முதல் கொலம்பியா அணி ஆதிக்கம் செலுத்தியது

Update: 2024-07-11 09:28 GMT

Image : @CopaAmerica

நியூ ஜெர்ஸி,

48-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக்,காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அர்ஜெண்டினா, கனடா, உருகுவே, கொலம்பியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் கொலம்பியா அணி ஆதிக்கம் செலுத்தியது . ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் அந்த அணியின் ஜெபர்சன் லெமா கோல் அடித்தார். இதனால் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் பதில் கோல் அடிக்க உருகுவே அணி வீரர்கள் போராடியும் முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்று கொலம்பியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வரும் 15ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோத உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்