கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரேசில்

பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Update: 2024-06-29 07:22 GMT

image courtesy: AFP

நெவாடா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் நெவாடாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரேசில் - பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து அசத்தியது. பராகுவே அணி பதிலுக்கு 1 கோல் திருப்பியது.

இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்