மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது;
புதுடெல்லி,
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உத்தரவாதங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அதன்படி, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். புவனேஷ்வர், நவி மும்பை மற்றும் கோவா ஆகிய மூன்று இடங்களில் போட்டிகளை நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.