ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான்-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

Update: 2023-03-18 01:02 GMT

image courtesy: Indian Super League twitter

கோவா,

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் ஏ.டி.கே மோகன் பகானும், பெங்களூரு எப்.சியும் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளன. இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறுகிறது.

புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த பிரித்தம் கோட்டால் தலைமையிலான ஏ.டி.கே மோகன் பகான் அணி அரை இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நடப்பு சாம்பியன் ஐதராபாத்தை சாய்த்தது. இதேபோல் 4-வது இடத்தை பெற்ற குர்பிரீத் சிங் சந்து தலைமையிலான பெங்களூரு அணி அரைஇறுதியில் மும்பை சிட்டியை வெளியேற்றியது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக்கில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். மோகன் பகான் வெற்றி பெற்றால் அவர்களுக்கு இது 4-வது பட்டமாக வரலாறு படைக்கும். பெங்களூரு அணி வெற்றி கண்டால் 2-வது பட்டமாக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்