ஆசிய கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி

நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.

Update: 2024-01-19 00:59 GMT

Image Tweet : @IndianFootball

தோஹா,

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறும்.

இதில் இந்தியா 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் உஸ்பெகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சிரியா அணியை எதிர்கொள்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்