6 நாடுகளில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதல்முறையாக 6 நாடு, மூன்று கண்டங்களில் நடத்தப்படுகிறது.;
லண்டன்,
24-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தொடங்கி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உலகக் கோப்பையின் முதல் 3 ஆட்டங்களை அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே ஆகிய நாடுகளில் நடத்த சர்வதேச கால்பந்து சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
6 நாடு, மூன்று கண்டங்களில் (ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா) உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.