உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

Update: 2023-06-03 10:11 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்குவதை முன்னிட்டு பல்வேறு முன்னணி வீரர்கள் தங்களது கருத்துகளையும், பிளேயிங் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மாவையும், 3 முதல் 5 இடங்களுக்கு புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானேவையும் தேர்வு செய்த அவர் 6வது இடத்தில் விக்கெட் கீப்பராக இஷன் கிஷானை தேர்வு செய்துள்ளார். ரிஷப் பண்டை போல் அதிரடி ஆட்டக்காரர் வேண்டும் என்பதால் அவர் இஷன் கிஷானை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

7வது இடத்தில் ஜடேஜாவை தேர்வு செய்த கைப் 8வது இடத்தில் பிட்ச் தன்மைக்கு ஏற்ப ஷர்துல் தாக்கூர் அல்லது அஷ்வினை தேர்வு செய்யலாம் என கூறியுள்ளார். 9 முதல் 11 இடங்களுக்கு முறையே முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவை அவர் தேர்வு செய்துள்ளார்.

கைப் தேர்வு செய்துள்ள இந்திய பிளேயிங் லெவன்:-

ரோகித் சர்மா, சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, இஷன் கிஷான், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின்/ ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

Tags:    

மேலும் செய்திகள்