உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.;
ஹராரே,
13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி இன்று தொடங்கியது. இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றறன. இதில் ஒரு ஆட்டத்தில் இதில் வெஸ்ட் இண்டீஸ் - அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவர்கள் முடிவில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.அந்த அணியில் ஜான்சன் சார்லஸ் , ஷாய் ஹோப் , ரோவ்மன் பவெல் , ரோஸ்டன் சேஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். அமெரிக்க அணியில் நேத்ராவால்கர் , கைல் பிலிப் தலா 3விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 298 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அமெரிக்கா அணியில் சிறப்பாக ஆடி கஜானந்த் சிங் சதம் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின.டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கி ஜிம்பாப்வே அணி 44.1 ஓவர்களில் விக்கெட் 2 இழப்பிற்கு ரன்கள் 291 எடுத்து ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது .