பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

Update: 2023-02-26 12:34 GMT

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியாவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்