பெண்கள் பிரீமியர் லீக்; உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 80 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 58 ரன்களும் குவித்து அசத்தினர்.
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அதிரடியாக விளையாடியது. வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய மந்தனா 80 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் எல்லிஸ் பெர்ரியும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் ரன் ரேட் வேகமாக சென்றது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் மந்தனா 80 ரன்களும், பெர்ரி 58 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 69 ரன்களில் 2 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.