சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகியது ஏன்..? - பிராவோ விளக்கம்

கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-09-27 11:27 GMT

image courtesy: AFP

கொல்கத்தா,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் 2008 -ம் ஆண்டு அறிமுகமானார். 2022-ம் ஆண்டு வரை 171 போட்டியில் விளையாடி 1500-க்கும் மேற்பட்ட ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து சென்னை அணியுடனே பயணிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் சென்னை அணியின் நிர்வாகமும் அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்த அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஓய்வு அறிவிப்பு வெளியான கையோடு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராகவும் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்காக பிராவோ மாறியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பிராவோ இதுகுறித்து கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது, "நான் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காக புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தை பகிர தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்