'நாங்கள் ஆட்டத்தை நன்றாக தொடங்கினோம் ஆனால் சரியாக முடிக்கவில்லை'- பாபர் அசாம்

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

Update: 2023-10-15 05:05 GMT

image courtesy; AFP

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம் ஆனால் சரியாக முடிக்க முடியவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

'இமாமிற்கும் எனக்கும் பார்ட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம். நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம். ஆனால் எங்களால் சரியாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.' இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்