இந்த தோல்வியால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைகிறோம் - பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத்

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

Update: 2024-09-03 13:05 GMT

கோப்புப்படம்

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய வங்காளதேசம் அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்காளதேசம் சாதனை படைத்தது.

இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டு தொடரை இழந்த பின் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தோல்வியால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைகிறோம். எங்களுடைய ஹோம் கண்டிஷனில் டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தோம்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தோல்வியில் நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். இந்த முறை அதையெல்லாம் மாற்றி சிறப்பாக செயல்படுவது குறித்து நாங்கள் பேசிக் கொண்டோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி எங்களால் செயல்பட முடியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அதற்கு வேறொரு வகையில் உடல் தகுதி சிறப்பாக தேவைப்படுகிறது. ஆனால், இந்த தொடரில் எங்களுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் என்ன நடந்ததோ அதுவேதான் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்