நாங்கள் இந்த முறை வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம் - பட்லர் பேட்டி

டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

Update: 2024-06-26 13:14 GMT

Image Courtesy: AFP

கயானா,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.

இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் இந்த முறை வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் விதம், மற்றும் அவர் அணியை வழிநடத்தும் விதம் ஆகியவை சிறப்பாக இருக்கிறது.

மேலும் இந்திய அணி மிகவும் சுதந்திரத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க முயற்சிக்கின்றனர். 2022ஆம் ஆண்டு இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, இந்திய அணி மாற்றங்களை செய்துள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டு உலக கோப்பையிலும் எதிரொலித்தது. இந்தியா இந்த விளையாட்டு பாணியில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தியா இந்த முறை ஆக்ரோஷமாக விளையாட போகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இங்கிலாந்தும் ஆக்ரோஷமான முறையிலேயே விளையாடும்.

கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது மிகவும் சிறப்பான நாள். அது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். அதுவும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து வெளியேறியது, சிறந்த தருணங்களில் ஒன்று. முக்கியமாக நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தினை பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்