டி.என்.பி.எல். முதலாவது தகுதிச் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெல்லை அணி..!
20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது.
சேலம்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார். ஷாஜகான் 25, சஞ்சய் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.