கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய டிம் சவுதி - காரணம் என்ன..?

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சவுதி விலகி உள்ளார்.

Update: 2024-10-02 08:54 GMT

Image Courtesy: @ICC

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சவுதி விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய தொடரில் பந்துவீச்சாளராக முழு கவனத்தை செலுத்த வேண்டி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், அதே சமயத்தில் புதிய கேப்டனுக்கு எல்லா விதமான ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும், வருகின்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கப் போவதாகவும் சவுதி தெரிவித்துள்ளார்.

டிம் சவுதி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து நியூசிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் லதாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து கேப்டனாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்