உலகக்கோப்பையை வெல்வது சுலபம் என நினைத்தேன் - ரோகித் சர்மா

உலகக்கோப்பையை வெல்வது சுலபம் என நினைத்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 23:05 GMT

டெல்லி,

2007ம் ஆண்டுக்கு பின் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெற்றுள்ளது. இதையடுத்து, பார்படாசில் இருந்து நாடு திரும்பிய இந்திய அணியினர் உலகக்கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். பின்னர், மும்பையில் கோப்பையுடன் அணிவகுப்பு நடத்தினர்.

இந்நிலையில், உலகக்கோப்பையை வெல்வது சுலபம் என நினைத்தேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 2007ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வது மிகவும் சுலபம் என நான் நினைத்தேன். ஆனால், 2007ம் ஆண்டுக்கு பிறகு வெற்றிபெற முடியாமல் நிறைய உலகக்கோப்பை தொடர்கள் சென்றுவிட்டன. ஊக்கத்தோடும், உறுதியோடும் இந்த அணியின் கேப்டனாக செயல்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமெரிக்காவின் உள்ள மோசமான மைதானம் உள்பட பல்வேறு சவால்களை கடந்து கோப்பையை வெல்லவேண்டும் என வீரர்கள் உறுதியாக இருந்தனர்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்