தற்போதையை கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் இவர்தான்...இந்திய வீரரை கூறிய டிரென்ட் பவுல்ட்...!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2023-10-13 10:50 GMT

Image Courtesy: AFP

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் சென்னையில் ஆடி வருகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பவுல்டிடம் தற்போதையை கிரிக்கெட் வீரர்களில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பவுல்ட் கூறியதாவது,

"தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் பும்ரா" என்றார். விராட் கோலி, ரோகித் சர்மா, கேன் வில்லியம்சன் என முன்னணி பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யாமல் டிரென்ட் பவுல்ட் பும்ராவை தேர்வு செய்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்