'இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்' - அஸ்வின்

இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் ஆடும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என அஸ்வின் கூறியுள்ளார்.

Update: 2023-09-30 22:38 GMT

கவுகாத்தி,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக விலகியதால் கடைசி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 37 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அஸ்வின் நேற்று டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், 'இந்த உலகக் கோப்பை போட்டியை அனுபவித்து விளையாடுவது என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் ஆடும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். எனவே இந்த உலகக் கோப்பை போட்டியை அனுபவித்து ஆடுவது மிகவும் முக்கியமானதாகும்.

வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சூழ்நிலைகள் நான் இப்போது இங்கு இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இது போன்ற போட்டிகளில் நெருக்கடி அதிகம் இருக்கும். எனவே அழுத்தத்தை நேர்த்தியாக கையாள்வது மிகவும் முக்கியமானதாகும்' என்று தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்