இந்த இரு வீரர்கள்தான் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

Update: 2024-10-02 14:57 GMT

கோப்புப்படம்

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது ஜெய்ஸ்வாலுக்கும், தொடர் நாயகன் விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர் நாயகன் விருது வென்ற பின் அஸ்வின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஜெயஸ்வால் சுதந்திரமாக விளையாடக்கூடிய திறமையானவர் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் போலவே அவரும் தன்னுடைய சர்வதேச கரியரை சமீபத்தில் துவங்கி உள்ளார். இருவருமே தங்களுடைய ஆரம்பகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அணியின் வருங்கால தூண்களாகவும், வெளிநாட்டில் அசத்தும் நட்சத்திரங்களாகவும் இருப்பதை நாம் விரைவில் பார்ப்போம்.

அவர்கள் மேலும் மேலும் புதிய அனுபவத்தை சந்திக்கும் போது இன்னும் சிறப்பாக என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அடையாளம் காண முடியும். இருவருமே உயர்தர வீரர்கள் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்