டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த ஸ்பெயின் அணி
இந்த பட்டியலில் இந்திய அணி 3- வது இடத்தில் உள்ளது.
துபாய்,
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸை வென்றதன் மூலம் ஸ்பெயின் தொடர்ந்து 14 டி20ஐ வெற்றிகளை நிறைவு செய்தது.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 12 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணியுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
அந்த பட்டியல்:-
1.ஸ்பெயின் - 14 வெற்றிகள்
2. மலேசியா/பெர்முடா - 13 வெற்றிகள்
3.இந்தியா/ஆப்கானிஸ்தான்/ருமேனியா - 12 வெற்றிகள்