தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் நியாயமானதுதான் - பாக்.வீரர் பேட்டி

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

Update: 2024-07-04 08:47 GMT

image courtesy: AFP

இஸ்லாமாபாத்,

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் முதல்முறையாக லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இதனால் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்தனர். பாகிஸ்தான் அணி வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லை, அதுதான் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அளித்த பேட்டியில், 'தற்போது பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளும் விமர்சனங்கள், கண்டனங்கள் நியாயமானதுதான். நாங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. எனவே விமர்சனங்களுக்கு நாங்கள் தகுதியானவர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் சாதிக்க முடியாது. உலகக்கோப்பையில் எங்களது செயல்பாடு மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு அணியாக தோற்கும்போது பந்து வீச்சு, பேட்டிங் நன்றாக இருந்தது என்று ஒருவராலும் சொல்ல முடியாது. ஒருவர் நோய்வாய்படும்போது குணப்படுத்த சில நேரம் ஆபரேஷன் தேவைப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் மொசின் நக்வி, கடின உழைப்பாளி. அணியில் யார் தொடர்வார்கள், யார் இருக்க மாட்டார்கள் என்பதை சேர்மன் முடிவு செய்வார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்