விராட் கோலியை விட 5 வருடங்களாக அணியில் சேர்க்கப்படாத அந்த பாக். வீரர்தான் பெஸ்ட் - கம்ரான் அக்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேர்க்கப்படாத ஒரு வீரரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு கம்ரான் அக்மல் பேசியுள்ளார்.

Update: 2024-06-15 10:58 GMT

லாகூர்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தன்னுடைய சகோதரர் உமர் அக்மல்,சிறப்பாக விளையாடி வந்த நிலையிலும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய அவர், " எனது சகோதரரான உமர் அக்மல் குறித்து நான் சில கருத்துகளை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன். டி20 உலகக்கோப்பை தொடர்களில் விராட் கோலியை விட புள்ளி விவரங்களில் உமர் அக்மல் தான் சிறந்து விளங்குகிறார். செயல்பாடுகள் என்று பார்த்தோம் என்றால் விராட் கோலி அருகே கூட உமர் அக்மலால் வர முடியாது. ஆனால் விராட் கோலியை விட அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தனிநபர் அதிகபட்சம் ஆகியவற்றை உமர் அக்மல் டி20 உலகக்கோப்பைகளில் வைத்திருக்கிறார் என்று கூறினார்.

உமர் அக்மல் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கம்ரான் அக்மல் கூறியதுபோல, விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் டி20 உலகக்கோப்பையில் 130 என்ற அளவில் இருக்கின்றது. அதேவேளை உமர் அக்மலின் ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் உள்ளது. விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்கள் ஆகும். ஆனால் உமர் அக்மலின் அதிகபட்ச ஸ்கோர் 94 ரன்கள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்