பி.சி.சி.ஐ. செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை அதுதான் - ஜெய் ஷா பெருமிதம்

2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-17 10:59 GMT

Image Source : PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக ஜெய் ஷா கடந்த 2019 முதல் செயல்பட்டு வருகிறார். சவுரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்றபோது செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் சிறப்பாக செயல்பட்டதால் 2-வது முறையாக பதவி நீட்டிக்கப்பட்டுள்ளார். 2023 ஆசியக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்லாதது, மகளிர் ஐ.பி.எல். தொடரை துவக்கியது, ஐ.பி.எல். தொடரை 10 அணிகள் கொண்டு வந்து விரிவுப்படுத்தியது போன்ற அம்சங்கள் ஜெய் ஷா எடுத்த முக்கிய முடிவுகளாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒலிம்பிக், இங்கிலீஷ் பிரீமியர் லீக், பிரெஞ்ச் ஓபன் போன்ற முக்கிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆனால் மொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக துபாயில் நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனையாக பார்ப்பதாக ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஒலிம்பிக், இபிஎல், பிரெஞ்ச் ஓபன் போன்ற தொடர்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் அப்போது பி.சி.சி.ஐ. நினைத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாங்கள் உலகிற்கு காண்பித்தோம். 2020 ஐ.பி.எல். தொடரை துபாயில் நடத்தியது என்னுடைய மிகப்பெரிய சாதனையாகும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்