அந்த இந்திய வீரர் துலீப் கோப்பை தொடர் கூட விளையாட தகுதியற்றவர் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

துலீப் கோப்பை தொடரின் 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Update: 2024-09-14 09:22 GMT

image courtesy: AFP

லாகூர்,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் சுற்று போட்டியில் அதிரடியாக விளையாடிய அரை சதமடித்த ஸ்ரேயாஸ் 2வது ரவுண்டில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் 7 பந்துகளில் டக் அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் துலீப் கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடரில் கூட விளையாடுவதற்கு தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஒரு கிரிக்கெட்டராக ஸ்ரேயாஸ் அவுட்டான விதம் எனக்கு சோகத்தை கொடுத்தது. நீங்கள் முன்னே அவுட்டானால் உங்களுக்கு போட்டியில் கவனமில்லை என்று அர்த்தம். கடந்த உலகக்கோப்பையில் 2 சதங்கள் அடித்து ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனான அவர் இங்கே 100 - 200 ரன்கள் அடித்திருக்க வேண்டும். புஜாரா, ரஹானே விளையாடாததாலேயே அதிர்ஷ்டத்தால் துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். உண்மையில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான பசி இருப்பதாக தெரியவில்லை.

ஏனெனில் அவர் பவுண்டரிகளை மட்டுமே அடிக்கும் பசியை கொண்டுள்ளார். ஒருவேளை உலகக்கோப்பையில் 2 சதங்கள் அடித்ததற்காக அவர் தன்னை விராட் கோலியாக நினைத்தால் அது நடக்காது. ஸ்ரேயாஸ் ஐயரை விரும்பும் இந்தியர்கள் என்னை மன்னிக்கவும். நான் இந்திய தேர்வாளராக இருந்தால் அவரை துலீப் கோப்பையில் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்