இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் அபார சதம் - முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 298/5

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்கியது

Update: 2022-07-08 14:39 GMT

காலே,

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறக்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் .

அடுத்து வந்த லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . மறுபுறம் நிலைத்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்களுடன் ,அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர் . இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்