பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-09-27 11:23 GMT

Image Courtesy: @ICC

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முல்தானிலும் (அக்டோபர் 7- 11 மற்றும் அக்டோபர் 15-19), 3வது போட்டி ராவல்பிண்டியிலும் (அக்டோபர் 24-28) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக மாற்றுவீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்;

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஜேக் கிராவ்லி, பென் டக்கட், ஜேக் லீச், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ். 

Tags:    

மேலும் செய்திகள்