இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் - கேமரூன் கிரீன்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-08-24 07:55 GMT

image courtesy; twitter/ @ICC

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது.

கடந்த 4 முறையாக தொடர்ந்து பார்டர் - கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி உள்ள இந்திய அணி இம்முறையும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என நம்புவதாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் முடிந்த அளவுக்கு எனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன். பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என நம்புகிறேன்.

நான் தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன். 70 முதல் 80வது ஓவருக்கு இடையே பந்துவீசுவது குறித்து நானும், மிட்செல் மார்ஷும் எப்போதும் பேசிக்கொள்வோம். அந்த இடைப்பட்ட ஓவர்களில் பந்தில் வேகம் மற்றும் ஸ்விங் இருக்காது. அணிக்கு ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்