இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-13 01:05 GMT

Image Courtesy: @ICC

புதுடெல்லி,

இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் ஜூரல் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். அஷ்வின் , ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 சுழற்பந்து வீச்சாளர்களும், சிராஜ், முகேஷ் குமார், பும்ரா, அவேஷ் கான் உள்ளிட்ட 4 வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக முகமது ஷமி இடம் பெறவில்லை. இந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்; ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில். யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.


Tags:    

மேலும் செய்திகள்